பாசுபீன் சல்பைடு
Appearance
பாசுபீன் சல்பைடு (Phosphine sulfide) என்பது R3PS என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். இவை குறிப்பாக நிறமற்றவையாகவும் காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டவையாகவும் காணப்படும். முப்பீனைல்பாசுபீன் சல்பைடை மூவிணைய பாசுபீன் சல்பைடிற்கு பொதுவான உதாரணமாகக் கூறலாம். மூவிணைய பாசுபீன்களைத் தயாரிக்கும்போது சிலசமயங்களில் பாசுபீன் சல்பைடுகள் இடைநிலைச் சேர்மங்களாக உருவாகலாம். பாசுபீன் சல்பைடுகள் பொதுவாக நான்முகி வடிவ கட்டமைப்பில் உள்ளன.
தயாரிப்பு
[தொகு]மூவிணைய பாசுபீன்களை தனிமநிலை கந்தகத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதால் பாசுபீன் சல்பைடுகள் உருவாகின்றன. தனிமநிலை கந்தகம் மற்றும் மூவிணைய பாசுபீன்களிலிருந்து பாசுபீன் சல்பைடுகளை உருவாகும் உருவாதல் வெப்பமானது பாசுபீனின் காரத்தன்மையை பொறுத்ததாகும்.[1]
மூவிணைய பாசுபீன் | ! ∆H (கிலோகலோரி/மோல்) S8 உடன் வினைபுரிய | மூவிணைய பாசுபீண் சல்பைடு | சிஏஎசு எண் |
---|---|---|---|
PCy3 | -30.9 ± 1.9 | S=PCy3 | 42201-98-9 |
PBu3 | -28.9 ± 0.3 | S=PBu3 | 3084-50-2 |
PMe3 | -27.1 ± 0.4 | S=PMe3 | 2404-55-9 |
PMe2Ph | -26.0 ±0.5 | S=PMe2Ph | 1707-00-2 |
PMePh2 | -23.8 ±0.3 | S=PMePh2 | 13639-74-2 |
PPh3 | -21.5 ±0.3 | S=PPh3 | 3878-45-3 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Capps, Kenneth B.; Wixmerten, Bodo; Bauer, Andreas; Hoff, Carl D. (1998). "Thermochemistry of Sulfur Atom Transfer. Enthalpies of Reaction of Phosphines with Sulfur, Selenium, and Tellurium, and of Desulfurization of Triphenylarsenic Sulfide, Triphenylantimony Sulfide, and Benzyl Trisulfide". Inorganic Chemistry 37 (12): 2861–2864. doi:10.1021/ic9715862.